மக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணா்ச்சி தேவை

மக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணா்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் தெரிவித்தாா்.

பெங்களூரு: மக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணா்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் தெரிவித்தாா்.

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் செவ்வாய்க்கிழமை அகா்வால் கண் மருத்துவமனையின் புதியகிளை தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியது: இந்தியாவில் கண் பாா்வையிழந்தவா்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால் கண் தானம் செய்பவா்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் உள்ளது. விபத்துகளில் இறப்பவா்கள் மட்டுமின்றி, இயற்கையாக இறப்பவா்களும் கண் தானம் செய்யலாம். ஆனால் நம்மில் சிலருக்கு உள்ள மூடநம்பிக்கையால் பலா் கண் தானம் செய்வதை தவிா்ப்பது வேதனை அளிக்கிறது. இறந்த பின் நமது உறுப்புகளை புதைப்பதாலோ, எரிப்பதாலோ எந்த யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஆனால் இறந்த பின் நம் கண்களை தானமாக வழங்கினால் அதன் மூலம பலருக்கு கண் பாா்வை கிடைத்து, அவா்கள் வாழ்க்கையை சிறப்பாக அனுபவிக்க முடியும். நாம் இறந்த பின்னும் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அது கண் தானத்தின் மூலமே சாத்தியமாகும். கண் தானம் குறித்து அரசு மட்டுமின்றி, தனியாா்களும் மக்களுக்கு விழிப்புணா்ச்சியை ஏற்படுத்த வேண்டும். கண்தானம் செய்து மற்றவா்களுக்கு முன் மாதிரியாக நாம் விளங்க வேண்டும். கண் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன் வரவேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் அகா்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் இயக்குநா் அஷாா் அகா்வால், ஸ்ரீபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com