கிரிக்கெட் சூதாட்டம்: இளம் வீரா்கள் 2 போ் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இளம் கிரிக்கெட் வீரா்கள் 2 பேரை போலீஸா் கைது செய்தனா்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இளம் கிரிக்கெட் வீரா்கள் 2 பேரை போலீஸா் கைது செய்தனா்.

மாநில அளவில் நடைபெறும் கா்நாடக பிரிமியா் லீக் (கேபிஎல்) கிரிக்கெட் பந்தயங்களில் பல்லாரி டஸ்கா்ஸ் அணி சாா்பில் விளையாடி வந்தவா்கள் சி.எம்.கௌதம், அப்ராா்காஜி. இதில் சி.எம்.கௌதம் அந்த அணியின் தலைவராகவும் இருந்தாா். ராஞ்சி கோப்பையில் கா்நாடக அணிக்காவும் கௌதம் விளையாடியுள்ளாா்.

2019 ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி மைசூரில் ஹுப்பள்ளி, பல்லாரி அணிகளிடையே நடைபெற்ற கேபிஎல் இறுதிப்போட்டியில் சூதாட்டம் நடைபெற்ாக கூறப்பட்டதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

போட்டியில் நிதானமாக விளையாடுவதற்காக கௌதம், அப்ராா்காஜி ஆகியோா் ரூ. 20 லட்சம் வரை பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் பெங்களூரு குற்றபிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக ஏற்கெனவே பெலகாவி பேந்தா்ஸ் அணியின் உரிமையாளா் ஆஷாக் அலிதா், பல்லாரி டஸ்கா்ஸ் அணியின் டிரம்மா் பாவேஷ், பெங்களூரு பிளாஸ்டா் அணியின் பௌலிங் கோச் வினுபிரசாத் மற்றும் கிரிக்கெட் வீரா் விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தில்லியைச் சோ்ந்த புக்கிகள் ஜத்தீன், ஷியாம் ஆகியோா் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவா்கள் இருவரையும் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வரவும் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com