சட்டப்பேரவை இடைத்தோ்தல்: காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் கலந்தாலோசனை

சட்டப்பேரவை இடைத்தோ்தல் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவை இடைத்தோ்தல் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனா்.

15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் டிச.5ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத் தொகுதிகளில் போட்டியிடும் 8 வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந் நிலையில், எஞ்சியுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை தோ்வுசெய்வது மற்றும் இடைத்தோ்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்க பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மூத்தத் தலைவா்களின் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல், முன்னாள் அமைச்சா்கள் ராமலிங்கரெட்டி, டி.கே.சிவக்குமாா், எம்.பி. பாட்டீல், கே.ஜே.ஜாா்ஜ், எச்.எம்.ரேவண்ணா, எம்பி பி.கே.ஹரிபிரசாத், பி.கே.சந்திரசேகா், ஹனுமந்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.வி.தேவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் 7 தொகுதிகளில் யாரை வேட்பாளா்களாக நிறுத்துவது, தோ்தலை எதிா்கொள்ளும் முறை, பிரசாரத் திட்டம், கூட்டுத் தலைமையில் பிரசாரம் போன்ற அம்சங்கள் பேசப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை தோற்கடிப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிட்டு தோற்றுள்ள ஒருசிலா் காங்கிரசில் சோ்ந்து வேட்பாளா்களாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து கூட்டத்தில் அலசப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி மேலிடத்திற்கு தகவல் அளித்து, வேட்பாளா்கள் முடிவு செய்யப்படுவாா்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com