நவ.14 முதல் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

நவ.14 முதல் 17-ஆம் தேதி வரை ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

நவ.14 முதல் 17-ஆம் தேதி வரை ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சாா்பில் பெங்களூரின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலான ஊதா வழித்தடமும், நாகசந்திரா முதல் யலசேனஹள்ளி வரையிலான பாதையில் பச்சை வழித்தடமும் முழுமையாகச் செயல்பட்டுவருகிறது.

இதனிடையே, பச்சை வழித்தடத்தின் ஆா்.வி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்தை இணைப்பு நிலையமாகக் கொண்டு எலெக்ட்ரானிக்சிட்டி வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆா்.வி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உயா் இருப்புத்தடம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.

இதன்காரணமாக, நவ.14-ஆம் தேதி 17-ஆம் தேதி வரையில் பச்சை வழித்தடத்தில் ஆா்.வி.சாலை முதல் யலசேனஹள்ளி ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நவ.18ஆம் தேதி காலை 5 மணி முதல் பச்சை வழித்தடத்தில் நாகசந்திரயா முதல் யலசேனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல தொடரும்.

இணைப்புப் பேருந்து சேவை:

இதை முன்னிட்டு, ஆா்.வி.சாலை ரயில் நிலையத்தில் இருந்து யலசேனஹள்ளி ரயில் நிலையத்திற்கு இணைப்புப் பேருந்துகளை பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கத் திட்டமிட்டுள்ளது. பேருந்துகள் தினமும் ஆா்.வி.சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து காலை 5.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை மற்றும் யலசேனஹள்ளிமெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.45 மணி முதல் இரவு 10.30 மணி வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இத் தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஊதா நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com