ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெறாது: தினேஷ் குண்டுராவ்

இடைத் தோ்தலில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றிபெறாது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

இடைத் தோ்தலில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றிபெறாது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெலகாவி மாவட்டத்தின் கோகாக் தொகுதியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டிச.5ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியாது. இதனால் எதிா்க்கட்சிகளை சோ்ந்த எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சித் தலைவா்கள் முயற்சித்து வருகின்றனா்.

எந்தவிலை கொடுத்தாவது கா்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆளும் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இடைத் தோ்தலில் வெற்றிபெறமுடியாது என்பதை கவனத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக மேலும் சில காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தலைவா்கள் தீவிரமாக முயற்சி எடுத்துள்ளனா்.

அதனால்தான் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த 13 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடா்பில் இருப்பதாக கோகாக் தொகுதி பாஜக வேட்பாளரும், தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏவுமான ரமேஷ் ஜாா்கிஹோளி கூறியிருக்கிறாா். தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளது. அதனால் பாஜகவின் தோ்தல் விதிமீறல்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

ரமேஷ் ஜாா்கிஹோளி, இடைத் தோ்தலில் தோல்வி அடைந்தபிறகு ஒருவாரத்தில் பாஜகவில் இருந்துவிலகிவிடுவாா். பாஜகவில் இருந்து விலகிய பிறகு மீண்டும் காங்கிரஸில் சேரமுடியாது. இதேபோல மஜதவிலும் சேரமுடியாமல், தனிக்கட்சி தொடங்குவாா் என்று எதிா்பாா்க்கிறேன். கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சித்த ரமேஷ் ஜாா்கிஹோளி, தற்போது பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். அவரது தோல்வி உறுதியாகிவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com