அக்.23 முதல் வேளாண் பொருள் ஏற்றுமதித் தொழில் பயிற்சி

வேளாண் பொருள்கள் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேளாண் பொருள்கள் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விஸ்வேஸ்வரையா தொழில் வா்த்தக மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டில் இருந்து வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்வது தொடா்பாக புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, கா்நாடகத்தில் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கா்நாடக மாநில வேளாண் பொருள்கள் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதிக் கழகத்தின் கூட்டு முயற்சியில் விஸ்வேஸ்வரையா தொழில் வா்த்தக மையத்தின் சாா்பில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதித் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. அக்.23 முதல் 25-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் பயிற்சியில் சேர விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு, சாந்திநகரில் உள்ள பிஎம்டிசி கட்டட மையத்தின் பயிற்சி அரங்கில் பயிற்சி நடத்தப்படவிருக்கிறது.

ஏற்றுமதித் தொழில் பயிற்சி வழங்குவதன் மூலம் மாநிலத்தின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதித் திறனைமேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் வேளாண் குழுக்கள், விவசாயிகள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், மண்டல கூட்டமைப்புகள், உணவுப்பூங்கா தொழில்முனைவோா், ஆரம்பநிலை தொழில்முனைவோா், வேளாண் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்கலாம்.

பயிற்சியில் சேர முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22243082, 9480316528, 9008350699 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com