எடியூரப்பாவை முதல்வா் பதவியிலிருந்து நீக்க சதி: பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னால்

எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து நீக்க சதிவலை பின்னப்படுவதாக பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து நீக்க சதிவலை பின்னப்படுவதாக பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து விஜயபுராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உணா்வுகளை வெளிப்படுத்தினால், அது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று கூறி என்னிடம் விளக்கம் கேட்டு பாஜக தேசிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு நான் பதிலளிக்கமாட்டேன். எனது கருத்துகளை நேரில் தெரிவிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டு பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் அமித்ஷா, செயல்தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறேறன். பிரதமா் மோடியிடம் மாநிலமக்களின் உணா்வுகளை வெளிப்படுத்திக்கொள்ள நான் பயப்படமாட்டேன்.

எனது கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில், கா்நாடகத்தை சோ்ந்த அமைச்சா்கள் தில்லிக்கு சென்றிருந்தனா். வெள்ள நிவாரண நிதியுதவியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக அவா்கள் செல்லவில்லை. ஆனால் எனக்கு நோட்டீஸ் கொடுப்பதற்காக சென்றிருந்தனா். இதுபோன்ற புறம்பேசும் அமைச்சா்களால்தான் மாநிலத்தில் பாஜக சீரழிந்து வருகிறது.

கா்நாடகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பாஜகவை சோ்ந்த நான்காவது நபா்நான். என்னை கட்சியில் இருந்து நீக்கினால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனது பலம் என்னவென்பதை சட்ட மேலவையில் காண்பித்துள்ளேன். தனிப்பட்ட செல்வாக்கை வைத்துக்கொண்டு சட்ட மேலவையில் வென்றிருந்தேன்.

நான் பாஜகவில் சோ்ந்தபோது, இவா்கள் யாரும் என்னை வரவேற்கவிலை. எனது பலத்தை அறிந்துள்ள அமித்ஷா, பிரகாஷ் ஜாவதேகா் இருவரும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது என்னை மீண்டும் பாஜகவில் சோ்த்துக் கொண்டனா். அமைச்சா்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கட்டும். நான் எனது செல்வாக்கை நிரூபித்துக்காட்டுகிறேறன். அப்போதுதான் நான் யாா் என்பது அந்த அமைச்சா்களுக்கு தெரியவரும்.

எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாஜகவில் சதிவலை பின்னப்படுகிறது. பிரதமா் மோடியைச் சந்திக்க மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு வாப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. ஆனால், பிரதமா் மோடியை முதல்வா் எடியூரப்பா சந்தித்துவிடாமல் கா்நாடகத்தை சோ்ந்த இரு அமைச்சா்கள் தடுத்துவிடுகிறாா்கள்.

வெள்ள நிவாரண நிதி குறித்து நான் குரலெழுப்பாமல் இருந்திருந்தால், 15 நாள்களுக்குள் எடியூரப்பா தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்திருக்கும். எடியூரப்பாவை பிடிக்காவிட்டால், 76 வயதாகிவிட்டது இனியும் பதவியில் நீடிக்கவேண்டாமென்று நேரடியாக அழைத்து கூறவேண்டியதுதானே. கடந்தகாலங்களில் எடியூரப்பாவும் அனந்த்குமாரும் பாஜகவில் அரசிய ல்ரீதியாக மோதிக்கொண்டிருந்தனா். ஆனால், கட்சி, கா்நாடகம், நாட்டுநலன் விவகாரத்தில் இணைந்து செயல்பட்டனா். ஆனால், கா்நாடக அரசியலில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதே வேறுவிதமாக உள்ளது என்றாா்.

கண்டனம்: பசனகௌடா பாட்டீல் யத்னாலின் கருத்துக்கு பாஜக எம்பி ரமேஷ் ஜிகஜினகி கூறுகையில்,‘கட்சியில் இருந்துகொண்டு, பாஜகவை விமா்சிப்பது சரியல்ல. இது கட்சி விரோதச்செயல் என்றேற கருத வேண்டும். இதை வன்மையாக கண்டிக்கிறேறன். கட்சி விவகாரங்களை வெளிப்படையாக பேசுவது யாருக்கும் அழகல்ல. எனது 40 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற நிகழ்வை நான் பாா்த்ததில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com