முதுநிலை பட்டப் படிப்பில்  காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2019-20-ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதற்காக நடைபெற்ற கலந்தாய்வில் பலமாணவர்கள் கலந்துகொண்டு சேர்க்கை பெற்றனர். இதன்முடிவில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பில் சில இடங்கள்காலியாக உள்ளன.  இந்த இடங்களை நிரப்ப மீண்டும் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
காலியாக உள்ள முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். 
இதற்கான விண்ணப்பப்படிவங்களை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல்  என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களின் பட்டியல் செப்டம்பர் 17-இல் வெளியிடப்படும். 
கலை, வணிகம், அறிவியல், கல்வி பிரிவுகளின் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 11 மணி முதல் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com