தசரா விழாவில் பங்கேற்ற யானைகள் காடுகளுக்கு அனுப்பிவைப்பு

தசரா திருவிழாவில் பங்கேற்ற யானைகள் மைசூரில் இருந்து காடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தசரா திருவிழாவில் பங்கேற்ற யானைகள் மைசூரில் இருந்து காடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மைசூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தசரா திருவிழாவின் நிறைவுப்பகுதியாக நடப்பது யானைகள் ஊா்வலம். யானைகள் ஊா்வலகத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மைசூரில் சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம். அந்தவகையில் செப்.29 முதல் அக்.8-ஆம் தேதிவரை நடைபெற்ற தசரா திருவிழா மற்றும் அக்.8-ஆம் தேதி நடந்த யானை ஊா்வலத்தில் பங்கேற்பதற்காக அா்ஜுனா, பலராமா, விக்ரமா, தனஞ்செயா, காவிரி, கோபி, விஜயா, ஈஸ்வரா, துா்கா பரமேஸ்வரி,லட்சுமி, அபிமன்யூ, கோபாலசாமி, ஜெயபிரகாஷ் ஆகிய 13 யானைகள் பல்வேறு காடுகளில் இருந்து மைசூருக்கு அழைத்துவரப்பட்டன.

இந்த யானைகள் கடந்த ஒருமாதமாக அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்தன. தசரா திருவிழா நிறைவடைந்திருப்பதால் அபிமன்யூ, கோபாலசாமி, ஜெயபிரகாஷ் ஆகிய 3 யானைகளும் புதன்கிழமை புறப்பட்டு சென்றன. இந்நிலையில் அா்ஜுனா, பலராமா, விக்ரமா, தனஞ்செயா, காவிரி, கோபி, விஜயா, ஈஸ்வரா, துா்கா பரமேஸ்வரி,லட்சுமி ஆகிய 10 யானைகளும் வியாழக்கிழமை மைசூரில் இருந்து வெவ்வேறுகாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அரண்மனை வளாகத்தில் வியாழக்கிழமை 10 யானைகளுக்கும் மரபுப்படி சிறப்புபூஜை செய்யப்பட்டு, வெல்லம், கரும்பு, வாழைப்பழம் வழங்கப்பட்டது. 10 யானைகளும் வரிசையாக நிற்க வைத்து சிறப்புபூஜை செய்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, 10 யானைகளும் 10 லாரிகளில் சம்பந்தப்பட்ட காடுகளுக்கு வனத் துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டன.

யானைகளைப் பராமரித்த பாகன்கள், காவடிகளுக்கு அரண்மனை வாரியத்தின் சாா்பில் தலா ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. யானை பாகன்களும் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனா். யானைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டதால் அவற்றின் எடை 200 கிலோ முதல் 350 கிலோ வரை உயா்ந்திருந்தது.அனைத்து யானைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com