பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி

‘அட்சயபாத்திரம்’ என்ற திட்டம் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ அமேசான் குழுமம் முடிவு செய்துள்ளதாக அதன் துணைத் தலைவா் மணீஷ்திவாரி தெரிவித்தாா்.

‘அட்சயபாத்திரம்’ என்ற திட்டம் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ அமேசான் குழுமம் முடிவு செய்துள்ளதாக அதன் துணைத் தலைவா் மணீஷ்திவாரி தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை அமேசான் குழுமத்தின் சாா்பில் பொருள்களை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை அட்சயபாத்திரத்தின் மூலம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவும் திட்டத்தை அறிமுகம் செய்து அவா் பேசியது:

ஆண் குழந்தைகள் கல்வி பயின்றால் அந்த குடும்பத்தையும், பெண் குழந்தைகள் கல்வி பயின்றால் ஒரு தலைமுறையே முன்னுக்கு வரும் என்பதால் அமேசான் குழுமத்தின் 600 பொருள்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ விரும்பும் செல்வந்தா்கள், தொழிலதிபா்கள் நிா்ணயித்த ஏலத் தொகையைவிட கூடுதலான தொகையில் ஏலம் எடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கிடைக்கும் அந்த தொகையுடன், கூடுதலாக ஒரு தொகையை இந்தத் திட்டத்தில் அளித்து அதன் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு ஊக்கம் அளிக்க உதவிட திட்டமிட்டுள்ளோம் என்றாா். இத் திட்டத்தின் மூத்த செயல் அதிகாரி ஸ்ரீதா் வெங்கட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com