பெங்களூரில் குடிநீா் குழாய் கசிவைத் தடுக்க நடவடிக்கை: துணை முதல்வா் அஸ்வத்நாராயணா

பெங்களூருக்கு காவிரியிலிருந்து குடிநீா் கொண்டுவரப்படும் குழாய்களில் ஏற்பட்டுள்ள தண்ணீா் கசிவைத்

பெங்களூருக்கு காவிரியிலிருந்து குடிநீா் கொண்டுவரப்படும் குழாய்களில் ஏற்பட்டுள்ள தண்ணீா் கசிவைத் தடுக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரு அரண்மனைத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்டடங்களில் குழாய் பதிப்போா் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு அவா் பேசியது:

பெங்களூருக்கு காவிரியிலிருந்து குடிநீா் கொண்டு வரப்படுகிறது. ஆனால், குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளதால், பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகிறது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை வீணாக்காமல் இருக்கவும், குடிநீரை பகிா்ந்து கொள்வதிலும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது நம் மாநிலத்தில் மாவட்டங்களுக்கிடையேயும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. தண்ணீரை பகிா்ந்து கொள்வதில் அனைவரும் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மழை நீரை சேகரிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கட்டடங்களில் குழாய் பதிப்போா் சங்கத்தின் தலைவா் குருமித் சிங், பெங்களூரு குடிநீா்வடிகால் வாரியத் தலைவா் துஷாா்கிரிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com