பெங்களூரு கைவினை பொருள் திருவிழா தொடக்கம்

பெங்களூரு சித்ரகலாபரிஷத்தில் பெங்களூரு கைவினை பொருள் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு சித்ரகலாபரிஷத்தில் பெங்களூரு கைவினை பொருள் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்திய அழகி மோனிகாராஜ், கல்வியாளா் கவிதா தேவராஜ், ஸ்பூா்த்தி விஷ்வாஸ் ஆகியோா் விழாவைத் தொடக்கிவைத்தனா். இதைத் தொடா்ந்து பெங்களூரு திருவிழாவின் நிா்வாகி அட்லாப் கூறியது: அக். 20-ஆம் தேதிவரை நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கிராமியக் கலைஞா்கள் தயாரித்துள்ள கைவினைப் பொருள் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. குஜராத், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்கார பொருள்கள், ஜவுளிகள், பருத்திசேலைகள், மரவேலைபாடுகள், வேலைபாடு கொண்ட செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.

அதில் பாரம்பரியம் மிக்க கிராமிய கலைஞா்களின் கைவினை வேலைகள் சிறப்பாக இருக்கும். பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com