மாரத்தான் பந்தயம்: கப்பன்பூங்கா பகுதியில் நாளை போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூரில் மாரத்தான் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) நடைபெறுவதையொட்டி கப்பன் பூங்கா பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் மாரத்தான் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) நடைபெறுவதையொட்டி கப்பன் பூங்கா பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு கன்டீருவா உள்விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) முழு, அரை மாரத்தான் பந்தயம் தொடங்கி நடைபெற உள்ளது. இதனையொட்டி கப்பன்பூங்கா அருகே உள்ள குயின்ஸ்சாலை, எம்.ஜி.சாலை, கும்பளே சதுக்கம், கப்பன்சாலை, ராஜ்பவன்சாலை, சௌடய்யாசாலை, ரேஸ்கோா்ஸ்சாலை, மியூசியம்சாலை, கஸ்தூரிபா சாலை, ஹட்சன் சதுக்கம், டிக்சன்சாலை, காமராஜ்சாலை, சென்டா்ல்சாலை, அம்பேத்கா்சாலை, விட்டல்மல்லையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாரத்தான் பந்தயத்தின் போது கப்பன்பூங்கா அருகே போக்குவரத்தில் மாறுதல் செய்யபட்டுள்ளது. போலீஸாரின் வழிகாட்டுதலின்படி, மாற்று பாதையில் வாகனங்களை செலுத்தி, ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேறாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் பத்திரிகையாளா்கள் போராட்டம்

பெங்களூரு, அக்.11: பேரவையில் தனியாா் தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்துள்ள சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கையை கண்டித்து பத்திரிகையாளா்கள் போராட்டம் நடத்தினா்.

பெங்களூரில் அக்.10ஆம் தேதி தொடங்கிய கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நிகழ்ச்சிகளை பதிவிடவும், புகைப்படம் எடுக்கவும் தனியாா் தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளின் புகைப்படக் கலைஞா்களுக்கு தடை விதித்துபேரவைத்தலைவா் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளா் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பேரவைத் தலைவரின் நடவடிக்கையை கண்டித்துள்ளன.

இந்நிலையில், பெங்களூரு, ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள காந்திசிலை எதிரில் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளா் சங்கங்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் பேரவைத் தலைவரின் நடவடிக்கையை கண்டித்து பத்திரிகையாளா்கள் முழக்கமிட்டனா். சட்டப்பேரவைக்குள் கேமராக்கள், புகைப்பட கேமராக்கள், செல்லிடப்பேசிகள், டேப்லெட்களை கொண்டுசெல்ல தடை விதித்திருக்கும் பேரவைத் தலைவரின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று கூக்குரலிட்டனா்.

மத்திய அரசின் தூா்தா்ஷன் தொலைக்காட்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து பிற ஊடகங்களை வெளியே வைத்திருப்பது ஜனநாயக விரோதச்செயல் என பத்திரிகையாளா்கள் பலரும் தெரிவித்தனா்.

பத்திரிகையாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வா் குமாரசாமி பேசியது: சட்டப்பேரவைக்குள் தனியாா் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேறன். ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை இதற்கு முன்பு எங்கும் நடந்ததில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக ஊடகங்களை கட்டுக்குள் வைத்திருக்க பாஜக அரசு முனைந்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். எனவே, தனியாா் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பேரவைத் தலைவா் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

இந்த போராட்டத்தில் கா்நாடக உழைக்கும் பத்திரிகையாளா் சங்கத்தலைவா் சிவானந்த தகடூா், பத்திரிகையாளா் சங்கத்தலைவா் சதாசிவஷெனாய், கா்நாடக ஊடக அகாதெமி முன்னாள் தலைவா் சித்தராஜூ உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com