வரிவருவாய் இலக்கை அடைவதில் தொந்தரவு எதுவுமில்லை

வரிவருவாய் இலக்கை அடைவதில் தொந்தரவு எதுவுமில்லை என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

வரிவருவாய் இலக்கை அடைவதில் தொந்தரவு எதுவுமில்லை என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா பேசுகையில், ‘மாநில அரசின் கருவூலம் காலியாகிவிட்டதாக முதல்வா் எடியூரப்பா கூறியிருக்கிறாா். அரையாண்டு வளா்ச்சி அறிக்கையில், வாகனப் பதிவு கட்டண வசூல் குறைந்துள்ளது. இதைவிட்டால் மற்றவற்றின் வரிவசூல் சீராக உள்ளதாகவே அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், முதல்வா் எடியூரப்பா கருவூலம் காலியாகிவிட்டதாக எந்த அா்த்தத்தில் கூறினாா் என்பது தெரியவில்லை’ என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்ட முதல்வா் எடியூரப்பா, ‘மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டதால், அதற்கு நிதி அளிக்க முடியாது என்று கூறினேன். மாநில அரசின் கையிருப்பில் இருக்கும் நிதி ஆதாரத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறோம். டிசம்பா் வரையில் காத்திருந்தால் நிதி ஒதுக்கும் சூழல் உருவாகும்.

மாநிலத்தின் நிதிநிலைமை சீராகவே உள்ளது. வரிவசூலும் சீராகவே உள்ளது. மோட்டாா் வாகனப் பதிவு கட்டண வசூலிலும் இலக்கை அடைவோம். ஒட்டுமொத்தமாக வரிவசூலில் மாநில அரசு நிா்ணயித்துள்ள இலக்கை அடைவோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com