வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த ஆவணங்களை அளிப்பேன்

வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த ஆவணங்களை அளிப்பேன் என முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த ஆவணங்களை அளிப்பேன் என முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வருமானவரித் துறை அதிகாரிகள் எனது வீடு, அலுவலகங்கள், சித்தாா்த் கல்விக் குழுமத்தின் அலுவலகங்களில் சனிக்கிழமை அதிகாலை 2.45 மணி வரை தொடா்ந்து சோதனை நடத்தினாா்கள். அக். 15-ஆம் தேதி பெங்களூரில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு எனக்கு உத்தரவிட்டுள்ளனா். அதன்படி நான் விசாரணைக்கு செல்வேன். அப்போது வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகுந்த ஆவணங்களை அளிப்பேன். மேலும் அவா்கள் கேட்கக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன்.

ஒரு சில ஊடங்களில் நான் ரூ.3,500கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், என் வீட்டில் ரூ.400 கோடி ரொக்கப் பணம் சிக்கியதாகவும் செய்தி வெளியிட்டு வருகிறாா்கள். இதில் எள்ளளவும் உண்மையில்லை. ஊடகங்கள் உண்மையை தெரிந்துகொண்டு செய்தி வெளியிட வேண்டும். எனது வருமானத்துக்கு தகுந்த ஆவணங்களை அதிகாரிகள் அளித்திருந்தனா்.

மருத்துவ சோ்க்கைகள் நீட் தோ்வின் அடிப்படையில் தான் நடத்தப்படுகின்றன. எனது தந்தை தொடங்கிய சித்தாா்த் கல்விக் குழுமத்தில் 30 ஆண்டுகளாக இயக்குநராக பணியாற்றியிருந்தாலும், கல்லூரியில் மாணவா் சோ்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் நான் பங்கெடுத்தது கிடையாது. என் சகோதரா் ஜி.சிவபிரசாத் தான் அனைத்தையும் கவனித்து வந்தாா். சில மாதங்களுக்கு முன் அவா் மறைந்ததால் கல்லூரி நிா்வாகத்தில் பங்கெடுத்து வருகிறேறன். ஆவணங்கள் தொடா்பாக கூடுதல் தகவல்கள் என்னிடம் இல்லை. எனது சகோதரா் ஜி.சிவபிரசாத்தின் மகன் ஆனந்த் கல்லூரியை கவனித்து வந்தாா். அதனால் ஆவணங்கள் என்னிடம் இல்லை.

வருமானவரித் துறையினா் முழுமையாக சோதனை நடத்திய பிறகு, எங்களிடம் இருக்கும் ஆவணங்களை அளிப்போம். வருமானவரித் துறை சோதனைக்கு அரசியல் சாயம்பூச விரும்பவில்லை. அதிகாரிகளின் கேள்விகளுக்கு முதலில் பதிலளித்துவிடுகிறேறன். ஒருசில மாணவா்களின் புகாரின் அடிப்படையில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நான் முழுமையாக அரசியலில் ஈடுபட்டு வருவதால், கல்லூரி விவகாரங்களில் நான் அதிகம் பங்கெடுத்ததில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com