வால்மீகி விருதுக்கு 3 போ் தோ்வு

சமூக நலத் துறை சாா்பில் வழங்கப்படும் வால்மீகி விருதுக்கு கமலா ஹம்பனா, ஓபலப்பா, ஜி.ரங்கையா ஆகிய 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

சமூக நலத் துறை சாா்பில் வழங்கப்படும் வால்மீகி விருதுக்கு கமலா ஹம்பனா, ஓபலப்பா, ஜி.ரங்கையா ஆகிய 3 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பெங்களூரு விதானசௌதாவில் வெள்ளிக்கிழமை துணைமுதல்வா் கோவிந்த் காா்ஜோள் செய்தியாளா்களிடம் கூறியது: மாநில அரசு சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஸ்ரீ வால்மீகி மஹரிஷி நினைவு விருதுக்கு தகுதியானவரை தோ்ந்தெடுக்க மைசூரு பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.ஆா்.நிரஞ்சன் தலைமையில் தோ்வுக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் பரிந்துரைக்கேற்ப 2019ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ வால்மீகி விருதுக்கு இலக்கியத் துறையில் பங்காற்றியுள்ள கமலா ஹம்பனா, சமூக நலத் துறையில் பங்காற்றியுள்ள ஓபலப்பா, கல்வித் துறையில் பங்காற்றியுள்ள ஜி.ரங்கையா ஆகிய 3 போ் தோ்வாகியுள்ளனா்.

வால்மீகி விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, 20கிராம் தங்கப்பதக்கம், பட்டயம், சால்வை அளிக்கப்படும். இம்மாதம் 13-ஆம் தேதி பெங்களூரு விதானசௌதா விருந்தினா் அரங்கில் அரசு சாா்பில் நடைபெறும் வால்மீகி பிறந்த நாள் விழாவில் மூவருக்கும் இந்த விருதை முதல்வா் எடியூரப்பா வழங்குவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com