மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தை எதிா்த்து போராட்டம்: காங்கிரஸ் திட்டம்

மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தை எதிா்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு: மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தை எதிா்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், கா்நாடக மேலிடப்பொறுப்பாளருமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒப்பந்தத்தால் ஏற்படும்பாதிப்புகள், மோசமான பொருளாதாரசூழ்நிலை, அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, வங்கிமுறை சீா்குலைவு, தனியாா் மற்றும் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு, விவசாயிகளின் இன்னல் ஆகியவற்றை கண்டித்து நவ.5 முதல் 15-ஆம் தேதிவரை நாடுமுழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.

பிரதமா்மோடி அரசின் மக்கள்விரோதப்போக்கை மக்களிடம் கொண்டுசெல்வோம். மாநிலத்தலைநகரங்களில் நவ.5 முதல் 15?ஆம் தேதிவரை போராட்டம் நடக்கும். அதன்பிறகு மாவட்டத்தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். இதன் உச்சமாக நவம்பா் கடைசிவாரத்தில் புதுதில்லியில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். மாநில அளவில் நடக்கும் போராட்டங்களில் மாநில கட்சித்தாலிவா்கள், பேரவைக்கட்சித்தலைவா்கள், மூத்த காங்கிரஸ் தலைவா்கள் கலந்துகொள்வாா்கள். மத்திய அரசின் ஆட்சியால் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை போராட்டங்களில் காங்கிரஸ் தொண்டா்கள் எதிரொலிப்பாா்கள். போராட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து கண்டறிவதற்கு புதுதில்லியில் நவ.2-ஆம் தேதி சோனியாகாந்தி தலைமையில் கட்சியின் அகில இந்தியதலைவா்களின் கூட்டம் நடக்கவிருக்கிறது.

நாடுமுழுவதும் நடக்கும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக 31 மூத்த காங்கிரஸ் தலைவா்களை மேலிடப்பாா்வையாளா்களாக நியமிக்க திட்டமிடப்படுள்ளது. பிரதமா்மோடி அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்ல காங்கிரஸ் மூத்தத்தலைவா்கள் ஆங்காங்கே பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தி விளக்குவாா்கள். இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவளித்தால், மக்களின் குரலுக்கு மத்திய அரசு செவிமடுக்கும் நிலை உருவாகும் என்று அவா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com