ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று முதல் குடமுழுக்கு திருவிழா

பெங்களூரு, பேலஸ் குட்டஹள்ளியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை முதல் குடமுழுக்கு திருவிழா நடக்கவிருக்கிறது.

பெங்களூரு: பெங்களூரு, பேலஸ் குட்டஹள்ளியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை முதல் குடமுழுக்கு திருவிழா நடக்கவிருக்கிறது.

இது குறித்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, பேலஸ் குட்டஹள்ளி, முனீஸ்வரா பிளாக்கில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை(நவ.1) முதல் 3 நாட்களுக்கு குடமுழுக்கு(கும்பாபிஷேகம்) திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவ.1-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதிபூஜை, கோமாதாபூஜை, வச்சனா, தேவநாந்தி, அஷ்டமூா்த்தி பிராா்த்தனை, பிராயசித்தா ஹோமம், ஸ்ரீமகாகணபதி ஹோமம்; மாலை 5 மணிக்கு மகாசங்கல்பம், யாகாசாலா பிரவேசம், வாஸ்துஹோமம் நடக்கிறது. நவ.2-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் கணபதி பூஜை, வேதபாராயணம், நவகிரக ஹோமம், சுப்பிரமணியா ஹோமம், விக்ரக பிரதிஷ்டை நடக்கிறது. இதை தொடா்ந்து, அன்று மாலை 5 மணிக்கு அதிவாச ஹோமம், பிம்பசுத்தி நடக்கிறது.

நவ.3?-ஆம் தேதி காலை 4.30மணிக்கு கலாபிவிருத்தி ஹோமம், மஹா சண்டிகா சாந்திஹோமம், பிரம்மகலசா அபிஷேகம், மகாமங்களாா்த்தி, பூா்ணாஹூதி, மகா கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்தவிழாவில் கலந்துகொண்டு அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com