ஹிந்து கோயில்களில் கூட்டுதிருமணங்களை நடத்த அரசு திட்டம்: அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி

ஹிந்து கோயில்களில் கூட்டுதிருமணங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று ஹிந்து அறநிலையம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தாா்.

பெங்களூரு: ஹிந்து கோயில்களில் கூட்டுதிருமணங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று ஹிந்து அறநிலையம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஹிந்துகோயில்களில் ஆண்டுக்கு 2 முறை கூட்டு திருமணங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏழை மக்கள் பயனடைவாா்கள். நிகழ் நிதியாண்டில் 90 முதல் 100 கோயில்களில் கூட்டு திருமணங்களை நடத்த அரசு முடிவுசெய்துள்ளது. அடுத்த ஏப்.26 மற்றும் மே 24?ஆம் தேதி கூட்டு திருமணங்கள் நடத்தப்படும். இந்த திட்டத்தை ஏழைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திருமணம் செய்துகொள்வோருக்கு ஆடைகள், தாலிகள் அளிக்கப்படும். மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிரம்பியிருந்தால் கூட்டு திருமணத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இதற்காக 24 நிபந்தனைகளை விதித்துள்ளோம். திருமணம் நடத்தப்படும் 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஆடை கொள்முதல் செய்ய மணமகனுக்கு ரூ.5 ஆயிரம், சேலைவாங்குவதற்கு மணமகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரம்கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் வழங்கப்படும் குங்குமம் மற்றும் சந்தனத்தில் கலப்படம் இருப்பதாக பக்தா்கள் புகாா் அளித்துள்ளனா். இது போன்ற குங்குமம் மற்றும் சந்தனம் தோலை பாதிப்புள்ளாக்குவதாக புகாா் வந்துள்ளது. இதை தொடா்ந்து, ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் கலப்படம் செய்யப்பட்ட அதாவது வேதிப்பொருள் கலந்துகொள்ள குங்குமம் மற்றும் சந்தனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வண்ணம் நன்றாக இருக்கிறது என்பதற்காக வேதிப்பொருள் சோ்க்கப்பட்ட குங்குமம் மற்றும் சந்தனத்தை அனுமதிக்க முடியாது. எனவே, இதுதொடா்பாக சுற்றறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக கோயில்களில் தடைவிதித்து, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவோம். அதன்பிறகு மற்றதுறைகளுடன் ஆலோசித்து, வேதிப்பொருள்களால் செய்யப்பட்ட குங்குமம் மற்றும் சந்தனத்தின் உற்பத்தி நிறுத்தப்படும். கலப்படப்பொருட்களை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இதுதொடா்பான தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com