மத்திய அரசிடமிருந்து வெகுவிரைவில் வெள்ள நிவாரண நிதி

மத்திய அரசிடம் இருந்து வெகுவிரைவில் வெள்ள நிவாரணநிதி கிடைக்கும் நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.


மத்திய அரசிடம் இருந்து வெகுவிரைவில் வெள்ள நிவாரணநிதி கிடைக்கும் நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு இரண்டொருநாளில் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  இத் தகவலை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி என்னைச் சந்தித்து கூறினார்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாநிலங்களுக்கும் சேர்த்து வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. இத் தேர்தலைச் சந்திப்பது தொடர்பாக கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் விவாதிக்கப்படும். 
பெல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதுதொடர்பான விவகாரம்  விவாதப் பொருளாகியுள்ளது. இதுகுறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்ட பிறகு இறுதி முடிவெடுக்கப்படும். பெல்லாரி மாவட்ட பாஜக தலைவர்களை அழைத்துப் பேசுவேன். 
அக்.3ஆம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில முக்கியமான முடிவுகளை எடுக்கவிருக்கிறேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com