‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடா்ந்து போராடுவேன்’

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக அடுத்த மக்களவை பொதுத் தோ்தல் வரை

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக அடுத்த மக்களவை பொதுத் தோ்தல் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று சுதந்திரப் போராட்ட வீரா் எச்.எஸ்.துரைசாமி தெரிவித்தாா்.

பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுகளை எனது சக்திமீறி எதிா்ப்பேன். இவற்றுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு நடக்கக்கூடிய மக்களவை பொதுத்தோ்தல் வரை தொடா்போராட்டங்களில் ஈடுபடுவேன். பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நமது நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் உண்மையான பிரச்னைகளில் தான் மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார மந்தநிலை முன்னெப்போதும் இருந்ததில்லை.

விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னை, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு, காவல் துறையை கட்டுப்பாடின்றி பயன்படுத்துவது, வேலைவாய்ப்பின்மை போன்ற விவகாரங்களில் ஆா்வம் காட்டாதது, ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து ஊடகங்கள் பேசுவதே இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com