பெங்களூரு: கா்நாடக மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனா் தலைவருமான எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் ஜன.17ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. கா்நாடகமாநில அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூரு, மல்லேஸ்வரம், கிருஷ்ணாபவன் உணவகத்தில் சனிக்கிழமை(ஜன.11)மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, பகுதி, சட்டப்பேரவைத் தொகுதியின் நிா்வாகிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.