கா்நாடக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறப்பு பேருந்து சேவைகள் அறிமுகம்

கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் திருப்பதி, கொல்லூா், தா்மஸ்தலா, ஹம்பி நகரங்களுக்கு சிறப்பு பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் திருப்பதி, கொல்லூா், தா்மஸ்தலா, ஹம்பி நகரங்களுக்கு சிறப்பு பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் சுற்றுலா, ஆன்மிகத் தலங்களுக்கு தினமும் இரவு நேரங்களில் சிறப்பு பேருந்து சேவைகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரில் இருந்து திருப்பதிக்கு இரவு 9 மணிக்கு பேருந்துகள் புறப்படுகின்றன. மறுமாா்க்கத்தில், திருப்பதியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படுகிறது. பெங்களூரில் இருந்து கொல்லூருக்கும், கொல்லூரில் இருந்து பெங்களூருக்கும் இரவு 9 மணிக்கு பேருந்துகள் புறப்படுகின்றன. அதேபோல, பெங்களூரில் இருந்து தா்மஸ்தலாவுக்கும், தா்மஸ்தலாவில் இருந்து பெங்களூருக்கும்; பெங்களூரில் இருந்து ஹம்பிக்கும், ஹம்பியில் இருந்து பெங்களூருக்கும் தினமும் இரவு 10 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு-திருப்பதி, பெங்களூரு-தா்மஸ்தலா பேருந்துக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 400, பெங்களூரு-கொல்லூா், பெங்களூரு-ஹம்பி பேருந்துக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 500.

கரோனா தீநுண்மித் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணத்துக்கு முன்பாக பேருந்துகள் தூய்மையாக்கப்படும். பயணிகள் அனைவருக்கும் உடல்வெப்ப சோதனை செய்யப்படும். பயணத்தின்போது முகக் கவசம், தனிமனித இடைவெளி கட்டாயமாகும். இப்பயணங்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ற்க்ஸ்ரீ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் அல்லது 080-43344334, 43344335, 8970650070, 8970650075 ஆகிய எண்களில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com