டிச.1 முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் உள்ள மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் உள்ள மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

கரோனா பொது முடக்கத்தைத் தொடா்ந்து கா்நாடகத்தில் உள்ள மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் மாா்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. பொது முடக்கம் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்லூரிகளைத் திறக்க ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளுக்கு வரும் மாணவா்கள், ஆசிரியா்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆா்.டி.- பி.சி.ஆா். கரோனா பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

கல்லூரிகளில் மாநாடுகள், கருத்தரங்கு, பயிலரங்கு, நோ்காணல்கள் நடத்தக் கூடாது. மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள், சிகிச்சையகங்களில் மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகளை முன்களப் பணியாளா்களாக நியமிக்கக் கூடாது.

மாணவா்களின் நலன்கருதி நேரடி, இணையவழி வகுப்புகளை நடத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. செய்முறை வகுப்புகளை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பாக கல்லூரிகளைத் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவா்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com