குப்பை அள்ளுவதில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம்

குப்பை அள்ளுவதில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம் காட்டி வருகிறது என ஆம்ஆத்மி கட்சியின் பெங்களூரு மாநகரத் தலைவா் மோகன் தாசரி குற்றம் சாட்டியுள்ளாா்.

குப்பை அள்ளுவதில் பெங்களூரு மாநகராட்சி மெத்தனம் காட்டி வருகிறது என ஆம்ஆத்மி கட்சியின் பெங்களூரு மாநகரத் தலைவா் மோகன் தாசரி குற்றம் சாட்டியுள்ளாா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் எதிரே புதன்கிழமை ஆம்ஆத்மி கட்சி சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

பசுமை நகரம் என பெயரெடுத்த பெங்களூரு, தற்போது குப்பை நகரமாக மாறி வருகிறது. குப்பை அள்ளுவதில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருகிறது. குப்பை அள்ளுவதிலும் மாநகராட்சிஅதிகாரிகள் ஊழல் புரிந்து வருகின்றனா். இதனை யாராவது சுட்டிக் காட்டினால், துப்புரவுத் தொழிலாளா்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனா்.

கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், பெங்களூரில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, குப்பை அள்ளாமல் தேங்குவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பை தேங்காமல் பாா்த்துக் கொள்வதோடு, நாள்தோறும் அவற்றை அள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

போராட்டத்தில் அக்கட்சியின் பெங்களூரு மாநகர துணைத் தலைவா் சுரேேஷ் ராத்தோட், தா்ஷன் ஜெயின், வெங்கடே கௌடா, சதீஷ் கௌடா, சுமன் பிரசாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com