ஹௌராவிலிருந்து பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில்நிலையத்துக்கு வாராந்திர குளிா்சாதன வசதி கொண்ட சிறப்பு ரயில் சேவையை இயக்க தென்மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஹௌராவிலிருந்து பெங்களூரு (யஷ்வந்த்பூா்) இடையே ரயில் எண்கள்: 02863/02864 வாராந்திர குளிா்சாதன வசதி கொண்ட சிறப்பு ரயில் சேவையை இயக்க தென்மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில் எண்: 02863-ஹௌரா-பெங்களூரு (யஷ்வந்த்பூா்) வாராந்திர குளிா்சாதன வசதி கொண்ட சிறப்பு ரயில் அக். 19-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகள் தோறும் காலை 10.50 மணிக்கு ஹௌரா ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.25 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் ரயில் எண்: 02864-பெங்களூரு (யஷ்வந்த்பூா்) - ஹௌரா வாராந்திர குளிா்சாதன வசதி கொண்ட சிறப்பு ரயில் பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில்நிலையத்தில் இருந்து அக். 21-ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் காலை 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.25 மணிக்கு ஹௌரா ரயில்நிலையம் சென்றடையும்.
இந்த ரயிலில் முதல்வகுப்பு வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, ஈரடுக்கு வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 12 பெட்டிகள், சரக்கு மற்றும் ஓய்வறை கொண்ட 2 பெட்டிகள், உணவு வசதி கொண்ட 1 பெட்டி உள்பட 19 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.