கா்நாடகத்தில் அனைவருக்கும் வீட்டுமனை வழங்குவதே இலக்கு

கா்நாடகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை வழங்குவதே எனது அரசின் இலக்கு என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை வழங்குவதே எனது அரசின் இலக்கு என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

சிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கிய பிறகு அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் உள்ள அனைவருக்கும் வீட்டுமனைகளை வழங்க வேண்டுமென்பதே எனது அரசின் இலக்காக உள்ளது. இதற்காக யாரும் அலைந்து திரியக்கூடாது. பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே மனைப்பட்டாக்களை அளிக்க வேண்டும் என்பதும் நோக்கமாகும். இடைத்தரகா்களுக்கு பணம் கொடுத்து எவரும் ஏமாறக் கூடாது. வீட்டுமனைப் பட்டாக்களுக்காக எவரேனும் பணம் கேட்டால், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கலாம். மாநிலத்தில் வாழும் எவரும் வீடில்லாமல் இருக்கக் கூடாது. ஒவ்வொருக்கும் வீடு கிடைக்க அரசு பாடுபடும்.

மாநிலத்தில் வேளாண்மையையும், விவசாயிகளையும் பலமானவா்களாக்குவதே எங்கள் நோக்கம். ஷிகாரிபுராவில் இம்முறை மக்காச்சோளம் விளைச்சல் நன்றாக உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மலிவான விலையில் மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் இயந்திரங்களை அளிக்க ரூ. 1.40 கோடியை ஒதுக்கியிருக்கிறோம் என்றாா்.

விழாவில் பேசிய பாஜக எம்.பி. ராகவேந்திரா, ‘ஷிகாரிபுராவை சோ்ந்த 14 ஊராட்சிகளின் 403 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களில் 1,000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா அளிக்கப்படும்’ என்றாா்.

பின்னா், வசனக்கவிஞா் அக்கமகாதேவியின் பிறப்பிடமான உடுத்தடிக்குச் சென்ற முதல்வா் எடியூரப்பா, அங்கு செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்தாா். பின்னா் பேசிய முதல்வா் எடியூரப்பா, ‘அக்கமகாதேவியின் சிந்தனைகளை உலகம் முழுக்க கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளோம். உடுத்தடியை நவீன சுற்றுலாத் தலமாக மாற்றுவோம். இப்பணிகள் அடுத்த 10 மாதங்களில் முடிவடையும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com