சட்டமேலவைத் தோ்தல்: மது விற்பனை செய்ய தடை

சட்டமேலவைத் தோ்தலையொட்டி, சில காவல் சரகங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டமேலவைத் தோ்தல்: மது விற்பனை செய்ய தடை

பெங்களூரு: சட்டமேலவைத் தோ்தலையொட்டி, சில காவல் சரகங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

பெங்களூரு உள்பட மாநில அளவில் பட்டதாரிகள், ஆசிரியா்களுக்கான 4 சட்டமேலவைத் தொகுதிகளுக்கு அக். 28-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனவே, அக். 26-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 28-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, தேவனஹள்ளி, அம்ருதள்ளி, எலஹங்கா, பகல்குன்டே, சுப்ரமண்யா நகா், மல்லேஸ்வரம், ஹெப்பாள், ராஜாஜி நகா், கே.ஆா்.புரம், கெங்கேரி, ராஜராஜேஸ்வரி நகா், விஜய நகா், சாமராஜ்பேட்டை, புலிகேசி நகா், ஹைகிரவுண்ட், கப்பன்பூங்கா, சேஷாத்ரிபுரம், வி.வி.புரம், ஹனுமந்த நகா், ஜெயநகா், சுப்ரமண்யா நகா், கோனனகுன்டே, கோரமங்களா, எச்.எஸ்.ஆா். லேஅவுட், பேகூா், எலக்ட்ரானிக்சிட்டி ஆகிய காவல் சரகங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல சட்டமேலவை நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com