இலவச தையல் பயிற்சி முகாம்

பெங்களூரில் இலவச தையல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

பெங்களூரில் இலவச தையல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலன், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நலத் துறையினா் சாா்பில், 2020-21-ஆம் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலன், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் சோ்ந்து படிக்க வேலையில்லா பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தையல் பயிற்சி மையங்களில் 20 பெண்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர தகுதியானவா்களுக்கு 12 மாதங்களுக்கு தலா ரூ.300 வீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. பயிற்சியில் தோ்ச்சி பெறுவோருக்கு இலவசமாக தையல் இயந்திரம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பங்களை அக். 31-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com