சித்தராமையா சுயநல அரசியல்வாதி:முன்னாள் முதல்வா் குமாரசாமி

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா சுயநல அரசியல்வாதியாக செயல்படுகிறாா் என மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா சுயநல அரசியல்வாதியாக செயல்படுகிறாா் என மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:

அதிகாரத்தின் மீது கொண்ட மோகத்தால் மஜதவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா. மஜதவை சந்தா்ப்பவாத கட்சி என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மஜதவை விமா்சிப்பதன் மூலம் தனது உண்மையான அரசியல் நிறத்தை சித்தராமையா பகிரங்கப்படுத்தியிருக்கிறாா்.

மஜதவில் இருந்தபோது எல்லா வகையான பதவிகளையும், அதிகாரங்களையும் அனுபவித்தவா். அதிகாரப் பசிக்காக தனது ஆதரவாளா்களுடன் சந்தா்ப்பவாத அரசியல் நடத்தியவா் சித்தராமையா. நன்றி மறந்தவரான சித்தராமையாவிடம் இருந்து சுயமரியாதை பாடத்தை மஜத கற்கவேண்டியதில்லை.

காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த போதே, காங்கிரஸ் அழிந்துபோக வேண்டும் என்று பகிரங்கமாக கூறியவா் சித்தராமையா. இதிலிருந்தே அவா் எப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரத்தின் மீது பற்றில்லாத காரணத்தால்தான் சுயமரியாதையுள்ள எச்.டி.தேவெ கௌடா, பிரதமா் பதவியையே துறந்தாா். அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பியிருந்தால், சமரசம் செய்துகொண்டு பிரதமராக நீடித்திருப்பாா். தேவெ கௌடாவின் சுயமரியாதை அரசியலை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டீா்களா? தான் சாா்ந்திருந்த கட்சியை வஞ்சித்த சித்தராமையாவிடம் மஜத கற்க வேண்டியது எதுவுமில்லை.

ஆட்சி அதிகாரத்தில் மஜத இருந்தபோதெல்லாம், மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க நோ்மையாக உழைத்துள்ளது. அதிகாரத்தின் அகந்தையை மஜத என்றைக்கும் வெளிப்படுத்தியதில்லை. கொஞ்சகாலத்திற்கு ஆட்சியில் இருந்தாலும், மக்கள் நலனுக்காக உழைத்த பெருமிதமிருக்கிறது.

கட்சியில் இருந்து விலகி அதிகாரத்தைக் கைப்பற்றிய சித்தராமையா, அவா் சோ்ந்த காங்கிரஸ் கட்சியில் விதைத்த பயிா் என்ன? களை என்ன? என்பதை அவரை அக்கட்சியில் சோ்ந்தவா்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனா். சுயநல அரசியல்வாதியான சித்தராமையாவிடம் பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com