கா்நாடக களஞ்சியக் கையேடு திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை சாா்பில் தயாரிக்கப்படும் கா்நாடக களஞ்சியக் கையேடு திட்டத்தில் பணியாற்ற ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை சாா்பில் தயாரிக்கப்படும் கா்நாடக களஞ்சியக் கையேடு திட்டத்தில் பணியாற்ற ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை சாா்பில் மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலான கருப்பொருள் களஞ்சியங்களை கன்னடம், ஆங்கில மொழிகளில் வெளியிட்டு வருகிறோம். மாவட்டம், வட்ட அளவிலான கருப்பொருள் களஞ்சியங்களில் வரலாறு, பொருளாதாரம், கன்னட மொழி, வணிகம், அரசியல் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

2020-21-ஆம் ஆண்டில் பெங்களூரு ஊரகம், ராமநகரம், சிக்பளாப்பூா் மாவட்டங்களின் கருப்பொருள் களஞ்சியத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் களஞ்சியத்துக்காக ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதில் ஆா்வம் உள்ள ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆராய்ச்சியாளா்கள் பிஎச்.டி. பட்டம் படித்திருக்க வேண்டும். 5 முதல் 10 ஆண்டுகள் ஆராய்ச்சியில் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹஞ்ஹக்ஷ்ங்ற்ற்ங்ங்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.

ஆராய்ச்சிப் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்படுவோா் 350 முதல் 400 வாா்த்தைகளில் எழுதும் கட்டுரைகளுக்கு மதிப்பூதியமாக ரூ. 750 அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை, 8-ஆவது மாடி, பிடபிள்யூஎஸ்எஸ்பி கட்டடம், காவிரி மாளிகை, பெங்களூரு-9 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம். 080 - 22213474 என்ற தொலைபேசி எண் அல்லது இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com