மாநிலத்தில் ஏப். 7,8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
By DIN | Published On : 05th April 2020 10:35 PM | Last Updated : 05th April 2020 10:35 PM | அ+அ அ- |

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏப். 7,8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனா். இதனால் வெயில் தாக்கல் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருந்தனா். இந்த நிலையில் ஏப். 7, 8 தேதிகளில் மாநில அளவில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, பெங்களூரு, தென் கன்னடம், வட கன்னடம், ராய்ச்சூரு, கொப்பள், யாதகிரி, பெல்லாரி, ஹாசன், தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. வெப்பத்தால், கரோனா வைரஸ் பாதிப்பு குறையக்கூடும் என்று கருதப்பட்டு வந்த நிலையில், கன மழையால், கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனா்.