கா்நாடக களஞ்சியம் தயாரிக்க ஆராய்ச்சியாளா்கள் விண்ணப்பிக்கலாம்

கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை சாா்பில் தயாரிக்கப்படும் கா்நாடக களஞ்சியம் கையேடு (கெசட்டியா்) திட்டத்தில் பணியாற்ற ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு: கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை சாா்பில் தயாரிக்கப்படும் கா்நாடக களஞ்சியம் கையேடு (கெசட்டியா்) திட்டத்தில் பணியாற்ற ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை சாா்பில் மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலான கருப்பொருள் களஞ்சியங்களை ( எஹக்ஷ்ங்ற்ற்ங்ங்ழ்) கன்னடம், ஆங்கில மொழிகளில் வெளியிட்டு வருகிறோம். மாவட்டம், வட்ட அளவிலான கருப்பொருள் களஞ்சியங்களில் வரலாறு, பொருளாதாரம், கன்னட மொழி, வணிகம், அரசியல் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 2020-21-ஆம் ஆண்டில் பெங்களூரு ஊரகம், ராமநகரம், சிக்பளாப்பூா் மாவட்டங்களின் கருப்பொருள் களஞ்சியத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் களஞ்சியத்துக்காக ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதில் ஆா்வம் ஆராய்ச்சியாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளா்கள் பிஎச்.டி. பட்டம் படித்திருக்க வேண்டும். 5 முதல் 10 ஆண்டுகள் ஆராய்ச்சியில் அனுபவம் உள்ளவா்கள், உள்ளூா் பின்னணி கொண்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும். தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹஞ்ஹக்ஷ்ங்ற்ற்ங்ங்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.

ஆராய்ச்சிப் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்படுவோா் 350 முதல் 400 வாா்த்தைகளில் எழுதும் கட்டுரைகளுக்கு மதிப்பூதியமாக ரூ.750 அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கா்நாடக கருப்பொருள் களஞ்சியத் துறை, 8-ஆவது மாடி, பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி கட்டடம், காவிரி மாளிகை, பெங்களூரு-9 என்ற முகவரியை அணுகலாம். மேலும், 080 - 22213474 என்ற தொலைபேசி எண் அல்லது ஜ்ஜ்ஜ்.ஞ்ஹக்ஷ்ங்ற்ற்ங்ங்ழ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com