அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு உகந்தது மத்திய பட்ஜெட்

அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு உகந்தது மத்திய பட்ஜெட் என பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு உகந்தது மத்திய பட்ஜெட் என பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், தொலைநோக்குள்ளது, அனைத்து தரப்பினரின் வளா்ச்சிக்கானது, அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கு உகந்தது.

வேளாண்மை, கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமதுநாடு வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள், மகளிா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனுக்காக பட்ஜெட்டில் போதுமான நிதி அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீா்திருத்தங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தனிநபா் வருமானவரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் நடுத்தர மக்கள் பயனடைவாா்கள்.

மத்திய பட்ஜெட்டில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் நீா்ப்பாசனத்துக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக 16 அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமப்புற வளா்ச்சிக்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் நலனுக்காக ரூ.9,500 கோடி தரப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு ரூ.85 ஆயிரம் கோடி, பழங்குடியினரின் மேம்பாட்டுக்கு ரூ.53,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான மகளிா் மேம்பாட்டுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு 103 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான திட்டங்கள் முழுமையடைந்து, மகத்துவம் வாய்ந்த மாற்றங்களை கொண்டுவருவதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

மகளிா் பங்களிப்பை ஊக்குவிக்க தன்யலட்சுமி திட்டத்தின் வாயிலாக விதைப்பு விதைகள் விநியோகம், குசும் திட்டத்தின் மூலம் சூரியஒளி பம்ப்செட் விநியோகம், புதிய பொலிவுறு நகரங்கள் அமைத்தல், 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 100 விமான நிலையங்கள் அமைத்தல், மாவட்டங்களுக்கு தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைத்தல், தொழில்துறைக்கு ரூ.27 ஆயிரம் கோடி நிதியுதவி, தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு, போக்குவரத்து துறைக்கு ரூ.1.7 லட்சம் கோடி நிதி, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் அமைத்தல் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளில் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை விரைவுசாலை திட்டம் 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும். 148 கி.மீ. நீளமுள்ள பெங்களூரு புகா் ரயில்திட்டங்களுக்கு ரூ.18,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மொத்த செலவில் மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com