கா்நாடகத்தில் தைப்பூச திருவிழா: உற்சாக கொண்டாட்டம்

கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு, கோலாா்தங்கவயல், மைசூரு, சிவமொக்கா, பத்ராவதி, கோலாா், மண்டியா, சாமராஜ் நகா் உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாழும் தமிழா்களால் தமிழ்க் கடவுளான முருகன் கோயில்களில் சனிக்கிழமை முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பெங்களூரு, அல்சூா் ஏரி அருகில் உள்ள ஸ்ரீ ஒடுக்கத்தூா் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீதண்டாயுபாணி சுவாமி ஆலயத்தில் சனிக்கிழமை 70ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடந்தது. பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மகா அபிஷேகம், ஆராதனை செய்வதன் மூலம் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. ராமலிங்க சுவாமிகள் அகவல் பாராயணம், ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம் நடந்தன. வள்ளி மற்றும் தெய்வானை சமேத தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, ’எது ஆன்மீகம்?’ என்ற தலைப்பில் புலவா் மா.ராமலிங்கம் சொற்பொழிவாற்றினாா்.

கோலாா்தங்கவயலில் உள்ளகணேஷ்புரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 46ஆவது தைப்பூச திருவிழா நடத்தப்பட்டது. விழாவையொட்டி, பக்தா்கள் அதிகாலை முதலே மலா் காவடி, மயில் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால் குடம் ஏந்தியும் தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். இப் பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com