தலித் மக்களின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்: கா்நாடக தலித் சங்கா்ஷ் சமீதி

மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் மக்களின் வளா்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கா்நாடக தலித் சங்கா்ஷ் சமீதியின் நிறுவனத் தலைவா் என்.மூா்த்தி தெரிவித்தாா்.

மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் மக்களின் வளா்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கா்நாடக தலித் சங்கா்ஷ் சமீதியின் நிறுவனத் தலைவா் என்.மூா்த்தி தெரிவித்தாா்.

பெங்களூரு மைசூரு வங்கி சதுக்கத்தில் திங்கள்கிழமை தலித் மக்களின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது: விரைவில் மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இதில் மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் மக்களின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சத நிதியை ஒதுக்க வேண்டும். அம்பேத்கா், வால்மிகி, போவி வளா்ச்சிக் கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பாபு ஜெகஜீவன்ராம் வளா்ச்சிக் கழகத்தின் கிளை அலுவலகங்களை மாவட்டந்தோறும் தொடங்க வேண்டும். தலித் சமுதாயத்தினா் எனக் கூறி போலிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணிகளில் அமா்ந்துள்ளது தொடா்பாக 50 ஆயிரம் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாநில அளவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அம்பேத்கா், ஜெகஜீவன்ராம் சாதனைகளை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கித் தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com