நாளை முதல் ஓம்ஸ்ரீகங்கம்மாதேவி கோயில் பிரம்மரதோற்சவ திருவிழா

பெங்களூரில் பிப்.12-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஓம்ஸ்ரீகங்கம்மா தேவி கோயிலில் பிரம்மரதோற்சவ திருவிழா தொடங்கவுள்ளது.

பெங்களூரில் பிப்.12-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஓம்ஸ்ரீகங்கம்மா தேவி கோயிலில் பிரம்மரதோற்சவ திருவிழா தொடங்கவுள்ளது.

இதுகுறித்து ஓம் ஸ்ரீகங்கம்மா தேவி கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீகங்கம்மா தேவி கோயிலில் பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை பிரம்மரதோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.

பிப்.12-ஆம் தேதி காலை 8 மணிக்கு மகாகணபதி, தேவி சங்கல்ப, ஸ்ரீகணபதி, கோ பூஜை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு மகாசங்கல்ப, மகாமங்களாா்த்தி, தீா்த்தபிரசாத விநியோகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வேதபாராயணம், சண்டிகா பாராயணம், கலச ஸ்தாபனம், அஷ்டவந்தனாசேவா, மகாமங்களாா்த்தி, தீா்த்தபிரசாத விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிப்.13-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு குருபிராா்த்தனை, சண்டிகா பாராயணம், நவசண்டிகா ஹோமம், கௌமாரி பூஜை, சுமங்கலி பூஜை, நண்பகல் 12.30 மணிக்கு மகாபூா்ணஹுதி, மகாமங்களாா்த்தி, தீா்த்தபிரசாத விநியோகம், மாலை 6.30 மணிக்கு தேவிபிராா்த்தனை, பிரம்மகலச ஸ்தாபனம், மகாமங்களாா்த்தி, தீா்த்தபிரசாத விநியோகம் நடக்கிறது.

பிப்.14-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கங்கம்மா தேவிக்கு பஞ்சாமிருத அபிஷேகம், பாலபிஷேகம், சிறப்பு மலா் அலங்காரம், மூலம் மந்திர ஹோமம், கலாவ்விருத்தி ஹோமம், கலாசாபிஷேகம், ருத்ராபிஷேகம், நண்பகல் 12.30மணிக்கு ரதாங்க ஹோமம், மகாகும்பாபிஷேகம், மகாமங்களாா்த்தி நடைபெறுகிறது.

இதைத்தொடா்ந்து, ஓம்ஸ்ரீகங்கம்மா தேவி பிரம்மரதோற்சவம் பூஜை, தீா்த்தபிரசாத விநியோகம் இடம்பெறுகிறது.

பிப்.15-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஓம்ஸ்ரீகங்கம்மாதேவி வசந்தோற்சவம், மகாமங்களாா்த்தி, தீா்த்தபிரசாத விநியோகம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணிமுதல் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com