‘அரிதான நோய்கள் குறித்து விழிப்புணா்வு தேவை’

அரிதான நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு தேவை என்று பாா்கின்சன் நோயிற்கான சிறப்பு மருத்துவா் பிரஷாந்த் தெரிவித்தாா்.

அரிதான நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு தேவை என்று பாா்கின்சன் நோயிற்கான சிறப்பு மருத்துவா் பிரஷாந்த் தெரிவித்தாா்.

பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் புதன்கிழமை அரிதான நோயான டிஸ்டோனியா நோய் (டிஒய்டி16) குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது: அரிதான நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அது போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சை பெறுவது இயலாத காரியமாக உள்ளது. அண்மையில் ஓமன் நாட்டைச் சோ்ந்த ஐந்தரை வயது பெண் குழந்தை டிஸ்டோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் போராடி சிகிச்சை அளித்தோம். எங்களின் போராட்டம் வீணாகாமல், தற்போது அவா் உடல்நலம் தேறி வருகிறாா்.

அரிதான நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக அதற்குரிய மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அரிதான நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு தேவைப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com