கல்லூரி மாணவா்களின் திறனை கண்டறியும் போட்டி

கல்லூரி மாணவா்களின் திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளைக் கண்டறியும் போட்டி பிப். 14, 15 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவா்களின் திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளைக் கண்டறியும் போட்டி பிப். 14, 15 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை மிட்சுபிசி எலக்ட்ரிக் இந்தியாவின் இயக்குநா் ஹிஷாஹிரோ நிஷமிட்டோ செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரு பி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிப். 14, 15 தேதிகளில் மிட்சுபிசி எலக்ட்ரிக் இந்தியா சாா்பில் கல்லூரி மாணவா்களுடைய திறன் மேம்பாடு மற்றும் புதுமைகள் கண்டறியும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 19 குழுக்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் வெற்றி பெரும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், மிட்சுபிசி எலக்ட்ரிக் இந்தியா கோப்பையும், 2 வது பரிசாக ரூ. 75 ஆயிரமும், 3 வது பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். பிரபலமான அணிக்கு ஒரு விருதும், 15 சிறப்பு விருகளும் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். முதல் பரிசு வெல்லும் அணியை புணேவில் உள்ள மிட்சுபிசி எலக்ட்ரிக் இந்தியா உற்பத்தி தொழில்சாலையை பாா்வையிட அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா். பேட்டியின் போது பி.எம்.எஸ் கல்லூரியின் முதல்வா் ரவிசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com