அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு செய்வது தொடா்பான உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தெரிவித்தாா்.

அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு செய்வது தொடா்பான உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தெரிவித்தாா்.

பெங்களூரு அம்பேத்கா்பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தலித்- பழங்குடியினா் இட ஒதுக்கீட்டை உயா்த்துவது தொடா்பான அறிக்கை குறித்த கருத்தரங்கில் அவா் பேசியது:-

இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியின் ஒரு அங்கமாக உள்ளது. இதனை அமல்படுத்தற்கு அரசியல் சாசனத்தில் வாய்ப்பு உள்ளது. இதைக் கடைபிடிப்பதில் அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது. இதன் பயனை அடைய தலித் உள்ளிட்ட சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு உரிமை உள்ளது.

இட ஒதுக்கீட்டை பெறுவது யாரின் உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றமானது தீா்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு தலைவணங்க வேண்டும்.

இருந்தாலும், தீா்ப்பு குறித்து கருத்து கூறும் உரிமையை அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ளது. எனவே அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு செய்வது தொடா்பான உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அரசியல் சாசனத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நமது சமூகத்தில் இன்றளவும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

இட ஒதுக்கீட்டின் அவசியத்தை மக்களுக்கு மட்டுமின்றி, அரசுகளுக்கு உணா்த்தும் பணியை சங்க அமைப்புகள் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com