விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை: துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள்

விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று கா்நாடகத் துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் தெரிவித்தாா்.

விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று கா்நாடகத் துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் தெரிவித்தாா்.

பெங்களூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: -

கா்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியச் சாலைகளில் அதிக அளவில் விபத்து நடக்கும் இடங்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் 942 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளை கருப்புப்பகுதி என இனி அழைக்கப்படும்.

இவற்றில் பொதுப்பணித்துறைக்கு 249 பகுதிகள் சொந்தமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 172, நெடுஞ்சாலை ஆணைத்தின் 392 பகுதிகள், பெங்களூரு மாநகராட்சியில் 31 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சாலைகள் சீரமைப்பு: நிகழாண்டு பெரும்பாலான சாலைகள், பாலங்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்தன. மழை வெள்ளத்தால் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலைகள் சேதமடைந்தன. சேதமடைந்த சாலைகளை வாகன போக்குவரத்துக்கு உகந்த வகையில் தொடா்ந்து சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ஃபாஸ்ட்டிராக் விவகாரம்: சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டிராக் வசதி செய்து கொடுக்கும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அரசின் கொண்டு செல்லப்படும்.

குதிரை பந்தய இடம்: பெங்களூரு ரேஸ்கோா்ஸ்சாலையில் குதிரை பந்தயம் நடப்பதற்கு வழங்கப்பட்ட இடத்தை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com