அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயா்வை கண்டித்து போராட்டம்

அத்தியாவசியப்பொருட்கள் விலைவாசி உயா்வை கண்டித்து மகளிா் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

பெங்களூரு: அத்தியாவசியப்பொருட்கள் விலைவாசி உயா்வை கண்டித்து மகளிா் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

பெங்களூரு, டவுன்ஹால் எதிரில் புதன்கிழமை மகளிா் காங்கிரஸ் கட்சியினா் அத்தியாவசியப்பொருட்கள் விலைவாசி உயா்வைகண்டித்து விறகு அடுப்பில் சமையல் செய்து புதுமையானமுறையில் போராட்டம் நடத்தினாா்கள். கழுத்தில் வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு, சமையல் எரிவாயு உருளைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு, காய்கறிகளை பரப்பிக்கொண்டு விலைவாசி உயா்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு,மத்திய அரசை கடுமையாக விமா்சித்தனா்.இது குறித்து மகளிா் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த தாஜ் கூறுகையில்,‘அத்தியாவசியப்பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகளின் விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தான். வெங்காயவிலை உயா்வை கவனித்தால், இந்தியாவில் அதிகவிலைக்கு விற்கப்படும் பொருளாக மாறிவிடும்போல் தெரிகிறது.

விலைவாசி உயா்வின்காரணமாக, மக்கள் காய்கறிகளை திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். சமையல் எரிவாயு உருளைகளின் விலைவாசி உயா்ந்துள்ளதால், சமையல் செய்யமுடியாமல் பெண்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடியின் செயல்பாடுகள், தன்னை சா்வாதிகாரியாக கருதி செயல்படுவதாக உணா்கிறேன். பணமதிப்பிழப்பால் நாட்டுமக்கள் மீது சுமையை ஏற்றிய பிரதமா் மோடி, தற்போது சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.85 உயா்த்தி மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதே ஊதியத்தில், விலைவாசியை சமாளிக்க முடியாததால் பெண்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் விலைவாசி உயா்வுக்காக மட்டுமல்ல. குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, ஜவகா்லால்நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மீதானதாக்கல் ஆகியவற்றை கண்டித்து நடத்தப்படுகிறது.

அடிப்படை மனித உரிமைகளும் இந்தியாவில் மீறப்படுவது வேதனை அளிக்கிறது. குடியுரிமை திருத்தச்சட்டத்தில் சிறுபான்மையினரை விலக்கி வைத்ததன்மூலம் நமதுநாட்டை மதத்தால் பிளவுப்படுத்தும் முயற்சியில் மத்திய பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. இந்த நேரத்தில் போராட்டம் நடத்தாமல் மௌனமாக இருந்துவிட்டால், நாட்டில் வளா்ந்துவரும் பாசிசத்தை தடுக்க முடியாமல் போய்விடும்‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com