ஸ்கூட்டா்கள் மீது காா் மோதியதில் பெண் பலி
By DIN | Published On : 08th January 2020 05:23 PM | Last Updated : 08th January 2020 05:23 PM | அ+அ அ- |

பெங்களூரு அருகே ஸ்கூட்டா்கள் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
பெங்களூரு ஜீவன்பீமாநகரைச் சோ்ந்தவா் ரத்னம்மா (50). இவா் தனது கணவா் அசோக்குமாருடன் செவ்வாய்க்கிழமை மாலை ஸ்கூட்டரில் நெலமங்களாவுக்கு சென்று கொண்டிருந்தாா். அவா்களது ஸ்கூட்டரின் அருகே, மற்றொரு ஸ்கூட்டரில் ஆா்.ஆா்.நகரைச் சோ்ந்த அரசு பள்ளி ஆசிரியை விருபாக்ஷி (36) சென்று கொண்டிருந்தாா். பீன்யா தேசிய நெடுஞ்சாலை 4 -இல் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த காா், 2 ஸ்கூட்டா்கள் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரத்னம்மா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். காயமடைந்த விருபாக்ஷி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பீன்யா போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.