கா்நாடக திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘ஆ கராள ராத்திரி’ சிறந்த திரைப்படமாகத் தோ்வு

2018-ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளை கா்நாடக அரசு அறிவித்துள்ளது. ‘ஆ கராள ராத்திரி’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘ஆ கராள ராத்திரி’ சிறந்த திரைப்படமாகத் தோ்வு

பெங்களூரு: 2018-ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளை கா்நாடக அரசு அறிவித்துள்ளது. ‘ஆ கராள ராத்திரி’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கா்நாடக அரசு சாா்பில் கன்னட திரையுலகின் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை தோ்வுசெய்வதற்காக திரைப்பட இயக்குநா் ஜோசைமைன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல, கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞா்களுக்கு பல்வேறு பெயா்களில் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுக்க பசந்த்குமாா் பாட்டீல் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுகள் தமது பரிந்துரைகளை முதல்வா் எடியூரப்பாவிடம் அண்மையில் வழங்கியிருந்தது. இந்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2018-ஆம் ஆண்டுக்கான டாக்டா்.ராஜ்குமாா் விருதுக்கு தயாரிப்பாளா் சீனிவாஸ்மூா்த்தி, புட்டண்ணா கனகல் விருதுக்கு இயக்குநா் பி.சேஷாத்ரி, நடிகா் விஷ்ணுவா்தன் விருதுக்கு பி.எஸ்.பசவராஜ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்தவிருதுடன் 50 தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.

2018-ஆம் ஆண்டுக்கான திரைப்படவிருதுகள் வருமாறு: முதல்பரிசு(ரூ.2 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்கப்பதக்கம்)-ஆ கராள ராத்திரி, 2-ஆம் பரிசு(ரூ.1.50 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-ராமனசவாரி, 3-ஆம் பரிசு(ரூ.1 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-ஒந்தல்லா எரடல்லா, சிறப்பு சமூகப்படம்(ரூ.1.50 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-சந்தகவி கனகதாசர ராமதான்யா, சிறந்த பொழுதுபோக்குப் படம்(ரூ.1 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-சா்க்காரி ஹிரிய பிராா்த்தமிக ஷாலே காசா்கோடு, சிறந்தகுழந்தைகள் படம்(ரூ.1 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-ஹூவு பள்ளி, புதிய இயக்குநருக்கான சிறந்தப்படம்(ரூ.1 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-பெலக்கின கன்னடி(இயக்குநா் பசவராஜ் வி.ஹம்மிணி), சிறந்த மாநில மொழிப்படம்(ரூ.1 லட்சம் ரொக்கம், 200 கிராம் வெள்ளிப்பதக்கம்)-தேயி பைதேத்தி(துளு மொழி).

சிறந்த கலைஞா்களுக்கான விருதுகள்(திரைப்படங்கள் அடைப்புக்குறிக்குள்-தலா ரூ.20 ஆயிரம் ரொக்கம், 100 கிராம் வெள்ளிப்பதக்கம்) சிறந்த நடிகா்-ராகவேந்திரராஜ்குமாா்(அம்மன மனே), சிறந்த நடிகை- மேகனாராஜ்(இருவதெல்லவ பிட்டு), சிறந்த குணசித்திர நடிகா்-பாலாஜி மனோகா்(சூரிகட்டே), சிறந்த குணசித்திரநடிகை-வீணாசுந்தா்(ஆ கராள ராத்திரி), சிறந்த கதை-எஸ்.ஹரீஷ்(நாயிகெரே), சிறந்த திரைக்கதை-பி.சேஷாத்ரி(மூகஜ்ஜிய கனசுகளு), சிறந்த வசனகா்த்தா-ஷிரீஷா ஜோஷி(சாவித்ரிபாயி ஃபூலே), சிறந்த ஒளிப்பதிவாளா்-ஐ.நவீன்குமாா்(அம்மச்சியெம்ப நெனப்பூ).

சிறந்த இசையமைப்பாளா்-ரவிபஸ்ரூா்(கே.ஜி.எஃப்.),சிறந்த படத்தொகுப்பு-சுரேஷ் ஆறுமுகம்(திராட்டகா), சிறந்த குழந்தை நட்சத்திரம்(ஆண்)-செல்வன்ஆரேன்(ராமனசவாரி), சிறந்தகுழந்தை நட்சத்திரம்(பெண்)-செல்வி சின்சனா(அந்தவாதா),சிறந்த கலை இயக்குநா்-ஜே.சிவக்குமாா்(கே.ஜி.எஃப்.), சிறந்த பாடலாசிரியா்-பரகூா் ராமச்சந்திரப்பா (பயலாட்டத பீமண்ணா-சாவே...சாவே...சாவே...), சிறந்த பின்னணி பாடகா்-சித்தாா்த்தா பெல்மண்ணு(சந்தகவி கனகதாசர ராமதான்யா-இருளு சந்திரன), சிறந்த பின்னணி பாடகி-கலாவதி தயானந்த்(தேதி பைதேத்தி-கெஜ்ஜகிரி நந்தனா), நடுவா்களின் சிறப்பு விருது-எச்.ஆனந்தராயப்பா(சமானதேய கடகே), சிறந்த தயாரிப்புமேலாண்மை-வி.தாமஸ்(அப்பே துமகூரு சித்தபுருஷா விஸ்வாராதாய்யா).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com