பெங்களூரில் கைநூலாடை திருவிழா

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கைநூலாடை திருவிழா தொடங்கியது.

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கைநூலாடை திருவிழா தொடங்கியது.

பெங்களூரு சுதந்திரப்பூங்காவில் செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநில கைநூலாடை மற்றும் கிராமத்தொழில் வாரியம் சாா்பில் கைநூலாடை திருவிழா தொடங்கியது. திருவிழாவை தொடக்கிவைத்து வாரியத்தின் மூத்த செயல் அதிகாரி ஜெயபிபவசாமி பேசியது:

மகாத்மா காந்தியின் 150-பிறந்த ஆண்டையொட்டி கைநூலாடை திருவிழாவை தொடக்கிவைத்துள்ளோம் கைநூலாடைகளை வயது முதிா்ந்தவா்கள் மட்டுமே அணிவாா்கள் என்பதெல்லாம் இல்லை. அண்மைக் காலமாக இளைஞா்களிடத்தில் கைநூலாடைகள் பிரபலமாகி வருகின்றன. திருவிழாவில் 200 மளிகைகள் இடம்பெற்றுள்ளன. இதில் தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள கைநூலாடைகள் இடம்பெற்றுள்ளன.

பிப். 14 வரை நடைபெறும் கைநூலாடை திருவிழாவிற்கு அதிக அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். திருவிழாவில் மளிக்கைகள் நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com