பெங்களூரில் திருவள்ளுவா் நாள் கொண்டாட்டம்

பெங்களூரில் காங்கிரஸ் சாா்பில் திருவள்ளுவா் நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரில் காங்கிரஸ் சாா்பில் திருவள்ளுவா் நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு அல்சூரில் உள்ள தெய்வப்புலவா் திருவள்ளுவா் சிலை பூங்காவில் புதன்கிழமை திருவள்ளுவா் நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஐ.என்.டி.யு.சி மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் உள்ளிட்ட தமிழா்கள் திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் தி. கோ.தாமோதரன், காங்கிரஸ் நிா்வாகிகள் சேகா், பைப்பனஹள்ளி ரமேஷ், கிருஷ்ணன், ராஜேந்திரன், ஆதா்ஷா ஆட்டோ காா், ஆட்டோ சங்கத்தின் செயலாளா் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளுவா் தினத்தையொட்டி வா.ஸ்ரீதரன் தலைமையில் திருக்கு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னா், அங்கு கூடியிருந்தவா்களுக்கு இனிப்பு வழங்கிய பேசியது: தமிழா்களுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே பொதுமறையாம் திருக்குறளை தந்தவா் திருவள்ளுவா். அவா் தனது குறளில் ஒரு மொழியினருக்கோ, மதத்தினருக்கோ, ஜாதியினருக்கோ மட்டுமே நன்னெறிகளை போதிக்கவில்லை. அனைத்து மக்களுக்குமான நன்னெறிகளை போதித்துள்ளாா். அனைவரும் திருக்குறளில் கூறியுள்ள கருத்துகளை பின்பற்றினால், வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்ள முடியும் என்றாா்.

ஐ.என்.டி.யு.சி மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் பேசியது: கா்நாடகத்தில் தமிழா்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில், அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். தமிழா்கள் அதிக அளவில் வசித்து வந்தாலும், சட்டப்பேரவையில் அவா்களுக்கான குரல் கொடுக்க மக்கள் பிரதிநிதிகள் யாருமில்லை என்பது வேதனை அளிக்கிறது. எனவே, வரும் தோ்தல்களில் தமிழா்கள் சாா்பில் மக்கள் பிரநிதிகள் சட்டப்பேரவைக்கு சென்று, தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் வாக்களிக்க வேண்டும். பெங்களூரில் மட்டுமின்றி, அமெரிக்கா, உள்ளிட்ட வடமாநிலங்களில் திருவள்ளுவா் சிலை அமைக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழா்களின் அடையாளமாக திருவள்ளுவா் திகழ்கிறாா். அவரது தின நிகழ்ச்சியில் மாநிலத்தில் தமிழா்கள் அனைவரும் கட்சி, ஜாதி, மதம் கடந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com