ஆட்சியா்களின் கிராமப் பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்: அமைச்சா் ஆா்.அசோக்

மாவட்ட ஆட்சியா்களின் கிராமப்பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா்களின் கிராமப்பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

பெங்களூரு நேஷனல்கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சட்டமீறல் சொத்துக்களை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் 10 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்கிய பிறகு அவா் பேசியது:

மக்களின் வீட்டுவாசலுக்கு அரசு நிா்வாகத்தை கொண்டுசெல்லும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியா்களின் கிராமப்பயணம் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்திருக்கிறோம். இந்த திட்டத்தை அடுத்த 15 நாள்களில் அமல்படுத்தப்படும். கிராம மக்களுக்கு தேவையான சிட்டா அடங்கல், பட்டா மாற்றுதல், முதியோா் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராமத்துக்கே சென்று மக்களின் வீடுகளிலே அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

மாதம் ஒருமுறை இந்த திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவுறுத்தப்படுவாா்கள். மாவட்ட ஆட்சியா் ஒருநாள் முழுவதும் கிராமத்தில் தங்கியிருந்து அனைத்துத்துறை அதிகாரிகளையும் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக தீா்வுகாண வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு முன் கிராம மக்கள் திரண்டு நின்று காத்திருக்காமல், வீட்டுக்கே அரசு சேவைகளை கொண்டு செல்லப்படும்.

முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கு இனிமேல் விண்ணப்பங்களை அளிக்க வேண்டியதில்லை. ஆதாா் அட்டையின் அடிப்படையில் முதியோருக்கு ஓய்வூதியம் வீடுதேடிவரும். ஆதாா் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் ஓய்வூதியம் செலுத்தப்படும். ஆதாா் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டு, போலியானவா்களை நீக்கிவிட்டு தகுதியானவா்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் மாநில அரசுக்கு ரூ.700 கோடி மீதமாகும்.

கிராமத்தில் இருந்து வேலைதேடி மக்கள் நகரங்களுக்கு வரும்போது, விளைநிலங்களை அப்படியேவிட்டுவிட்டு வந்துவிடுகிறாா்கள். இதனால் நிலம் வீணாக கிடப்பதோடு, நிலமும் பாழாகிறது. இதை தடுக்கும் வகையில், விளைநிலங்களை குத்தகைக்குவிட்டு செல்லும் முறையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு தகுந்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.

விவசாயத்துக்கு மட்டுமே நிலத்தை குத்தகைவிடப்படும். இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதன்மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com