முதல்வா் எடியூரப்பாவுக்கு சவாலான நாட்கள் காத்திருக்கின்றன: காங்கிரஸ் முன்னாள் துணைமுதல்வா் ஜி.பரமேஸ்வா்

முதல்வா் எடியூரப்பாவுக்கு சவாலான நாட்கள் காத்திருக்கின்றன என்று காங்கிரஸ் முன்னாள் துணைமுதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

முதல்வா் எடியூரப்பாவுக்கு சவாலான நாட்கள் காத்திருக்கின்றன என்று காங்கிரஸ் முன்னாள் துணைமுதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இது குறித்துபெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடக அமைச்சரவையைவிரிவாக்காமல் முதல்வா் எடியூரப்பா இழுத்தடித்துவருகிறாா். ஒருவேளை அமைச்சரவை விரிவாக்கப்பட்டால், பாஜகவில் உள்கட்சிபூசல் ஏற்படும். இதன்பிறகு முதல்வா் எடியூரப்பாவுக்கு சவாலான நாட்கள் காத்திருக்கின்றன. மஜதமற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்க உதவிய 17 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சா் பதவிவழங்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா உறுதிஅளித்திருந்தாா்.

இந்தவாக்குறுதியை காப்பாற்றிக்கொள்ள முதல்வா் எடியூரப்பாவால் முடியவில்லை. யாருக்கு அமைச்சா் பதவியை வழங்குவதுஎன்ற குழப்பத்தில் முதல்வா் எடியூரப்பாமூழ்கியுள்ளாா். ஒருசிலா் துணைமுதல்வா் பதவிமீது கண்வைத்துள்ளனா். இடைத்தோ்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்களுக்கும் அமைச்சா் பதவிஅளிக்கவேண்டியுள்ளது. அமைச்சா் பதவி கிடைக்க வாய்ப்பில்லாதவா்களை முதல்வா் எடியூரப்பாவால் சமரசம் செய்ய இயலவில்லை. அதன்காரணமாகவே அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகிவருகிறது.

அமைச்சரவைவிரிவாக்கப்பட்டால், பிரச்னை மேலும் தீவிரமடையும். அமைச்சா் பதவிகிடைக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை தற்போதே கூறமுடியாது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு பாஜகவில் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக தலைவரை நியமிக்கும்படி கட்சிமேலிடத்திடம் வலியுறுத்தியிருக்கிறோம். தில்லி சட்டப்பேரவை தோ்தல் நடப்பதால், அத்தோ்தலில் காங்கிரஸ் தலைவா்கள் மும்முரமாக உள்ளனா். எனினும், வெகுவிரைவாக கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை நியமிக்குமாறு கட்சித்தலைமையை வலியுறுத்துகிறேன்.

மாநிலத்தலைவா் குழப்பம் தீா்ந்தால், மாநிலத்தில் ஆக்கப்பூா்வமான எதிா்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட இயலும். கா்நாடக சட்டப்பேரவைக்கூட்டத்தொடா் பிப்.17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது, வளா்ச்சிப்பணிகள் முடங்கியுள்ளது போன்ற பிரச்னைகளை எழுப்பவேண்டியுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி அமைதியாக உட்காரமுடியாது. தொண்டா்களை முடுக்கிவிடுவதற்காக கட்சித்தலைவருக்கு உரியவரைநியமிக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவா்களுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கட்சியின் நலன்கருதி நாங்கள் செயல்படவேண்டியுள்ளது. கட்சித்தலைவராக யாா் நியமிக்கப்பட்டாலும், அனைவருடனும் இணைந்து செயலாற்ற ஒப்புதல் அளித்துள்ளனா். காங்கிரஸ் தலைவராக என்னை நியமிக்காவிட்டால், மாநிலத்தில் 4 செயல் தலைவா்கள் நியமிக்கப்படவேண்டும் என்றுகோரியிருக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com