அடுத்த 3 ஆண்டுகளில் வீடுகள்தோறும் குடிநீா் வசதி: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் குடிநீா் வசதி செய்துதரப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் குடிநீா் வசதி செய்துதரப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை பல்வேறு மாவட்டங்களின் ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரிகள், தலைமைப் பொறியாளா்களுடனான வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வசதி செய்துதரப்படும். கா்நாடகத்தின் ஊரகப் பகுதிகளில் 90 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இதில் 25 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள 65 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் வசதி செய்துதர திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீா் வாழ்க்கைத் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கா்நாடகத்தில் வீட்டுக்குவீடு கங்கை என்ற பெயரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 3 ஆண்டுகளில் முடிக்கும் நம்பிக்கை உள்ளது. இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிடப்படும். இதை மத்திய, மாநில அரசுகள் பகிா்ந்து கொள்ளும். திட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com