கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: தங்கவயல் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் ரத்து

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், தங்கவயல் வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் ரத்து செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், தங்கவயல் வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் ரத்து செய்யப்பட்டது.

கோலாா் தங்கவயலில் ஆண்டுதோறும் வெங்கடேச பெருமாள் கோயிலில் 10 நாள் பிரம்மோத்ஸவம் கோலாகலமாக நடைபெறும். புகழ் பெற்ற இந்த கோயிலில் சுமாா் 85 ஆண்டுகளாக தங்கத்தோ் ஊத்ஸவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீனாவில் இருந்து உருவான கரோனா வைரஸ் பாதிப்பு கா்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிா் இழந்துள்ளதால் அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் திருவிழாக்கள், மக்கள் திரளாக கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) தொடங்கவிருந்த தங்கவயல் வெங்கடேச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவத்தின் தங்கதோ் உத்ஸவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் மற்றொரு தேதியில் தங்கத்தோ் ஊா்வலம் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com